Skip to main content

Posts

பெண்களுக்கான முக்கிய குறிப்புகள் (பாட்டி வைத்தியம்)

🔹 கருவுற்றிருக்கும் போது...! 🟢கருவுற்று மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற மசக்கை பிரச்சனை தீர...!                                                      ஏலக்காயை ஊசியில் குத்தி அதன்மேல் பசு நெய் ஒன்றிரண்டு துளிகள் விட்டு அடுப்பில் காட்டி எரித்து சாம்பலாக்கி தேனில் குழைத்து ஒரு நாளுக்கு நான்கு-ஐந்து முறை நாக்கில் தடவலாம். 🔹 பிறந்த குழந்தைக்கு...! பிறந்த குழந்தையைப் பற்றி நம்மூரில் ஒரு சொலவடை உண்டு. 'எண்ணெயும் தண்ணியும்தான் பிள்ளையை வளர்க்கும் ' என்பார்கள். அது 100 சதவிகிதம் சரி. குழந்தை பிறந்ததில் இருந்தே அதற்கு சுத்தமான தண்ணீரை ஒரு பாலாடை அளவுக்காவது குடிக்கப் பழக்குங்கள். தாய்ப்பாலும் தண்ணீராகத் தான் இருக்கும். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தரும்போது பிள்ளைக்கு உச்சா போவது சுலபமாக இருக்கும். பிறந்த குழந்தை ஆய் போகும்போது கவனித்திருக்கிறீர்களா? ரொம்பவும் கறுப்பாக... அதெல்லாம் கழிவுகள். அதில் மிச்சம் மீதம் ஏதேனும் இருந்தால் இப்படி தண...

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢

உதடு அழகாக சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனால் அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும். 🔹 உதடு வெடிப்புக்கு சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

நோய்களுக்கு முக்கிய காரணமே மலச்சிக்கல்தான். அந்த மலச்சிக்கலுக்கு தீர்வழிக்கும் மணத்தக்காளி கீரை எவ்வாறு பயன்படுகிறது என்று இந்த பதிவு மூலம் அறிந்துக் கொள்ளலாம். ✅🟢 மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்  மணத்தக்காளி கீரை சட்னி 🟢✅ 👉மணத்தக்காளி கீரை சட்னி வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 🔴தேவையான பொருட்கள் 🔹மணத்தக்காளிக் கீரை  - 2 பிடி 🔹மிளகு -  ¼ டீஸ்பூன் 🔹சரகம்  - ¼ டீஸ்பூன் 🔹பச்சை மிளகாய் -1 (விரும்பினால்) 🔹சின்ன வெங்காயம்  - 10 🔹தேங்காய்த் துருவல் - கால் கப் 🔹உப்பு  - தேவையான அளவு. 🔴தாளிக்க 🔹எண்ணெய் - 1 டீஸ்பூன் 🔹கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் 🔴செய்முறை   ➧மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் எடுத்து கொள்ளவும். ➧கீரையை சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்து எடுங்கள். ➧மிக்சியில் வதக்கிய கீரை, மிளகு, சீரகம், தேங்காய் துருவ...

சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ

 பொதுவாக டீ மீது அனைவருக்கும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதன் நன்மை, தீமை ஆகியவற்றுக்கு அப்பார்ப்பட்டு அதன் மீது அடிமையாய் திகழ்வோரும் உண்டு.   டீக்கு உற்சாகம் அளிப்பது தேயிலையே. அதாவது டீத்தூள். அதைக் கொண்டு நமது உடலையும் பாதுகாக்க முடியும் எவ்வாறு என்பதை இந்த பகிர்வு உங்களுக்கு தெளிவு படுத்தும்.   ✅🟢 சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ 🟢✅ 🟥🔹தேவையான பொருட்கள்          🔹கற்பூரவள்ளி இலை – 5 🔹ட தூள் – 1 டீஸ்பூன் 🔹தேன் – தே.அ 🔹தண்ணீர் – 2 கப் 🔹எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் 🔹இஞ்சி – ½ துண்டு 🔹மிளகு – 4 🔹ஏலக்காய் – 1 🟥🔹செய்முறை  கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் டீ தூளை போட்டு கொதிக்க வையுங்கள். பின்பு அதில் கற்பூரவள்ளி இலையையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். பின்பு இஞ்சியை துண்டு துண்டாக வெட்டி அதில் போடுங்கள். அதன்பின்னர் ஏலக்காயை இடித்து அதில் போடுங்கள். நன்கு கொதித்த பின்னால் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு டீ கோப்பையில் ஊற்றி அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும்...

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...

 அளவிற்கு அதிகமாக தண்ணீர் பருகுவதை சுட்டிக்காட்டும் 6 அறிகுறிகள்;  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...  குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில் சாப்பிடும் பொருட்கள் மற்றும் உணவில் தண்ணீர் கலந்திருப்பதை உணராமல் நிறைய பேர் தண்ணீரை அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் அதிக நீரிழப்பு ஏற்படக்கூடும். பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதிக அளவு தண்ணீர் பருகுகிறீர்கள் என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.  1.சிறுநீரின் நிறம்: நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்களா? என்பதை கண்டறியும் சிறந்த வழிகளுள் ஒன்று, சிறுநீரின் நிறத்தை கண்காணிப்பதாகும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது மோசமான அறிகுறியாகும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருகிவர வேண்டும். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவதே சரியானது. அது உடலில் நீர்ச்சத்து உகந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டும். ஆனால் சிறுநீர் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம்...

எலுமிச்சையை இப்படி செய்து குடியுங்கள்! உடல் எடையையும் குறைக்கும்; கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்|Make and drink lemon like this! Reduce body weight

எலுமிச்சை கலந்த தண்ணீர் என்பது எலுமிச்சை பழத்தை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் போட்டு வைத்த நீராகும். அந்த நீரை அருந்திப் பாருங்கள்... தொடர்ச்சியாக செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்க காத்திருக்கிறது. 1)உடல் எடையை குறைக்கும் : தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை பருகி வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். செரிமானம் மற்றும் மெடாபலிசத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி குடல் சுத்தமாகும். அதிகப்படியான கொழுப்பை எரித்து எடை குறைய துணை புரிகிறது. 2)சருமம் : தினமும் காலையில் வெறும் வயிற்றில் நல்ல சூடான எலுமிச்சை தண்ணீரை அருந்தி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 3)நோய் எதிர்ப்பு சக்தி : எலுமிச்சை தண்ணீர் அஸ்கார்பிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இது உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 4)சிறுநீரக கற்கள் : எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. ஏற்கனவே சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 1...

அவல் சாப்பிடுவதனால் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?|Are there so many health benefits to eating flattened red rice?

○ அவல் தமிழர்களின் உணவுப் பட்டியலில் முக்கியமான இடம்பெற்றிருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். ○ இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ○ அவலானது அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். ○ கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம் உள்ளது. 👉👉தற்போது அவை என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்  ■ அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ■ குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். ■ நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாகவும் சமைத்து உண்ணலாம். ■ சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்...

ஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா? இதோ நாட்டு வைத்தியம்| Have you ever fattened up after being the mother of a baby?

இன்றைய காலகட்டத்தில் 15 வயது பெண்கள் கூட 2 பிள்ளைகளுக்கு தாயானவர்கள் போல் உடல் பருமனடைந்து காணப்படுகின்றனர். எனவே உடல் பருமனுக்கு குழந்தை பெற்றவர்கள் விதிவிலக்கா என்ன? குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள்? என்ற கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டலைப்பதை பொழுது போக்காகவே அக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்வது வழக்கம். முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்களின் சொம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். சிலருக்கு ஹார்மோன் சமநிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள். உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின்வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம்… உங்களுக்கு உதவும் வகையில்...

இதை செய்தாலே போதும் அல்சர் குணமாகிவிடும்! Easy way to cure Ulcer

அல்சர் என்றால்... அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். * இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனச் சொல்லலாம். * உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களை ஈசோபேகல் அல்சர் என வகைப்படுத்தப்படுகிறது. * சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் எனச் சொல்லலாம். தவிர்க்க வேண்டியவை ◆ கெஃபைன் ◆ டீ ◆ சாக்லேட் ◆ ஐஸ்கிரீம் ◆ காரமான உணவுகள் ◆  பால் ◆  சோடா மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட வேண்டியவை ◆மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும். ◆மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப்செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் சரியாகும். ◆அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில்உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயி...

காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிச்சு பாருங்க.! பெறும் நன்மைகள் ஏராளம்... Benefits of Fenugreek or Methi water

  வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் வெந்தயத்தில் விட்டமின் எ, புரோட்டின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தையாமின், சோடியம், சுண்ணாம்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. அதிலும் வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் வெந்தயத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம். ♦️வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி? வெந்தய நீரைத் தயாரிப்பது என்பது மிகவும் ஈஸி. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 2 டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். ♦️நன்மைகள் : 1) வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும். 2) வெந்தய விதைகளில் நார்ச்சத்து உள்ளதால்  இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது. மேலும் இவை உடல் சர்க்கரையை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதை போன்று...

சரும பராமரிப்பில் முல்தானிமட்டியின் விஷேட பங்கு The special role of multanimatti (Fuller's earth) in skin care

💆‍♀️முக அழகு பராமரிப்பிற்கு என பெண்கள் சலூன், பியூட்டி பார்லர் என பல்வேறு இடங்களுக்கு சென்று பணத்தை, தண்ணீர் போன்று செலவழிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், பண விரயத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, இது போன்ற பல எண்ணற்ற பலன்களை தரும் முல்தானி மட்டியை நாம் எவ்வாறு நமது முக அழகை பராமரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படுத்தலாம் என விளக்குகிறது  ✨முல்தானிமட்டி உலர்ந்த செல்களை நீக்கவும், எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது.  ✨முல்தானிமட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும். பரு பிரச்சனை உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது.  ✨முகப்பரு உள்ளவர்கள், அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்பேக் போடலாம். மிகச் சிறந்த பலன் கிடைக்கும். ✨வெயில்காலத்தில் முல்தானி மட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு மு...

(Will Dialysis cure the kidney failure permanently? ??????)சிறுநீரக செயலிழப்பிற்கு டயாலிசிஸ் நிரந்தர தீர்வு ஆகுமா……❓❓❓❗❗❗

  ●உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு.  ●எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.  ❓சிறுநீரகத்தின் பணிகள்❓  ❗நெப்ரான்❗  ~இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை  பிரித் தெடுக்கிறது.  ~சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன.  ~மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.  ~சிறுநீரகம் சீராக செயல்படவில்லையென்றால் இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.  ~தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.  ~இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது.  ~அதிலிருந்து உடலுக்குத் தேவையான……  ○குளுக்கோஸ்,  ○அமினோ அமிலம்,  ○வைட்டமின்கள்,  ○ஹார்மோன்கள்  போன்றவற்றைத் தே...