🔹கருவுற்றிருக்கும் போது...!
🟢கருவுற்று மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற மசக்கை பிரச்சனை தீர...!
ஏலக்காயை ஊசியில் குத்தி அதன்மேல் பசு நெய் ஒன்றிரண்டு துளிகள் விட்டு அடுப்பில் காட்டி எரித்து சாம்பலாக்கி தேனில் குழைத்து ஒரு நாளுக்கு நான்கு-ஐந்து முறை நாக்கில் தடவலாம்.
🔹பிறந்த குழந்தைக்கு...!
பிறந்த குழந்தையைப் பற்றி நம்மூரில் ஒரு சொலவடை உண்டு. 'எண்ணெயும் தண்ணியும்தான் பிள்ளையை வளர்க்கும் ' என்பார்கள். அது 100 சதவிகிதம் சரி. குழந்தை பிறந்ததில் இருந்தே அதற்கு சுத்தமான தண்ணீரை ஒரு பாலாடை அளவுக்காவது குடிக்கப் பழக்குங்கள். தாய்ப்பாலும் தண்ணீராகத் தான் இருக்கும். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தரும்போது பிள்ளைக்கு உச்சா போவது சுலபமாக இருக்கும்.
பிறந்த குழந்தை ஆய் போகும்போது கவனித்திருக்கிறீர்களா? ரொம்பவும் கறுப்பாக... அதெல்லாம் கழிவுகள். அதில் மிச்சம் மீதம் ஏதேனும் இருந்தால் இப்படி தண்ணீர் கொடுக்கும்போது வெளியேறி விடும்.
Comments
Post a Comment