Skip to main content

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி





நோய்களுக்கு முக்கிய காரணமே மலச்சிக்கல்தான். அந்த மலச்சிக்கலுக்கு தீர்வழிக்கும் மணத்தக்காளி கீரை எவ்வாறு பயன்படுகிறது என்று இந்த பதிவு மூலம் அறிந்துக் கொள்ளலாம்.



✅🟢 மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் 

மணத்தக்காளி கீரை சட்னி 🟢✅


👉மணத்தக்காளி கீரை சட்னி

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


🔴தேவையான பொருட்கள்

🔹மணத்தக்காளிக் கீரை  - 2 பிடி

🔹மிளகு -  ¼ டீஸ்பூன்

🔹சரகம்  - ¼ டீஸ்பூன்

🔹பச்சை மிளகாய் -1 (விரும்பினால்)

🔹சின்ன வெங்காயம்  - 10

🔹தேங்காய்த் துருவல் - கால் கப்

🔹உப்பு  - தேவையான அளவு.


🔴தாளிக்க

🔹எண்ணெய் - 1 டீஸ்பூன்

🔹கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்


🔴செய்முறை  

➧மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் எடுத்து கொள்ளவும்.

➧கீரையை சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்து எடுங்கள்.

➧மிக்சியில் வதக்கிய கீரை, மிளகு, சீரகம், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், ப.மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.


😁சூப்பரான மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.




Comments

Popular posts from this blog

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢