Skip to main content

காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிச்சு பாருங்க.! பெறும் நன்மைகள் ஏராளம்... Benefits of Fenugreek or Methi water

 




வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

மேலும் வெந்தயத்தில் விட்டமின் எ, புரோட்டின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தையாமின், சோடியம், சுண்ணாம்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

அதிலும் வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் வெந்தயத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

♦️வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி?

வெந்தய நீரைத் தயாரிப்பது என்பது மிகவும் ஈஸி. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 2 டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.

♦️நன்மைகள் :

1) வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும்.




2) வெந்தய விதைகளில் நார்ச்சத்து உள்ளதால்  இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது. மேலும் இவை உடல் சர்க்கரையை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதை போன்று  மேம்படுத்தவும் உதவுகிறது. மற்றும் இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கிறது.         




3) வெந்தயத்திற்கு கல்லீரலில் எல்.டி.எல் ஏற்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உள்ளதால், அது செல்களில் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. மேலும் இது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடலில் கெட்ட கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கிறது.
4) செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். அதுவும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது மற்றும் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது.

5) வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதனால்  அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி புரிந்து, அழகான சருமத்தைத் தருகிறது.

6) வெந்தய விதைகளில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையான வளையங்கள் மற்றும் கறைகளைப் போக்க உதவுகிறது.


📍குறிப்பு:
●இதை உட்கொள்ளும் முன் உங்களுக்கு அலர்ஜி மற்றும் பிற பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம்.

●ஆயுள்வேத முறைப்படி வீட்டில் கை மருந்தில் உங்களின் பிரச்சினைகளை சரி செய்ய சிறிது காலம் தேவைப்படும். ஒரேநாளில் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும்.

● எந்த ஒரு முறையை பின்பற்றும் போதும் தொடர்ச்சியாக செய்து வரும்போது தகுந்த பலனை எதிர்பார்க்க முடியும்.

Comments

Popular posts from this blog

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢