Skip to main content

சரும பராமரிப்பில் முல்தானிமட்டியின் விஷேட பங்கு The special role of multanimatti (Fuller's earth) in skin care


💆‍♀️முக அழகு பராமரிப்பிற்கு என பெண்கள் சலூன், பியூட்டி பார்லர் என பல்வேறு இடங்களுக்கு சென்று பணத்தை, தண்ணீர் போன்று செலவழிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், பண விரயத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, இது போன்ற பல எண்ணற்ற பலன்களை தரும் முல்தானி மட்டியை நாம் எவ்வாறு நமது முக அழகை பராமரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படுத்தலாம் என விளக்குகிறது 


✨முல்தானிமட்டி உலர்ந்த செல்களை நீக்கவும், எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது. 


✨முல்தானிமட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும். பரு பிரச்சனை
உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது. 


✨முகப்பரு உள்ளவர்கள், அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்பேக் போடலாம். மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.


✨வெயில்காலத்தில் முல்தானி மட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும். 



✨புதினா, வேப்ப இலைகளின் விழுது இவற்றுடன் 2 டீஸ்பூன் முல்தானிமட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்கிறது. 


✨15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானிமட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென  இருக்கும்.



📍குறிப்பு: 

●ஆயுள்வேத முறைப்படி வீட்டில் கை மருந்தில் உங்களின் பிரச்சினைகளை சரி செய்ய சிறிது காலம் தேவைப்படும். ஒரேநாளில் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும். 


● எந்த ஒரு முறையை பின்பற்றும் போதும் தொடர்ச்சியாக செய்து வரும்போது தகுந்த பலனை எதிர்பார்க்க முடியும்.



            "வாழ்க வளமுடன்"

Comments

Popular posts from this blog

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢