Skip to main content

எலுமிச்சையை இப்படி செய்து குடியுங்கள்! உடல் எடையையும் குறைக்கும்; கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்|Make and drink lemon like this! Reduce body weight

எலுமிச்சை கலந்த தண்ணீர் என்பது எலுமிச்சை பழத்தை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் போட்டு வைத்த நீராகும்.

அந்த நீரை அருந்திப் பாருங்கள்... தொடர்ச்சியாக செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்க காத்திருக்கிறது.

1)உடல் எடையை குறைக்கும் :
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை பருகி வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். செரிமானம் மற்றும் மெடாபலிசத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி குடல் சுத்தமாகும். அதிகப்படியான கொழுப்பை எரித்து எடை குறைய துணை புரிகிறது.
2)சருமம் :
தினமும் காலையில் வெறும் வயிற்றில் நல்ல சூடான எலுமிச்சை தண்ணீரை அருந்தி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
3)நோய் எதிர்ப்பு சக்தி :
எலுமிச்சை தண்ணீர் அஸ்கார்பிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இது உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
4)சிறுநீரக கற்கள் :
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. ஏற்கனவே சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 125 மில்லி எலுமிச்சை சாறு எடுத்து கொண்டால் விரைவில் நல்ல பலனை பெறுவார்கள்.


📍குறிப்பு:
●ஆயுள்வேத முறைப்படி வீட்டில் கை மருந்தில் உங்களின் பிரச்சினைகளை சரி செய்ய சிறிது காலம் தேவைப்படும். ஒரேநாளில் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும்.

● எந்த ஒரு முறையை பின்பற்றும் போதும் தொடர்ச்சியாக செய்து வரும்போது தகுந்த பலனை எதிர்பார்க்க முடியும்.


            "வாழ்க வளமுடன்"

Comments

Popular posts from this blog

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢