Skip to main content

அவல் சாப்பிடுவதனால் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?|Are there so many health benefits to eating flattened red rice?

○ அவல் தமிழர்களின் உணவுப் பட்டியலில் முக்கியமான இடம்பெற்றிருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவாகும்.

○ இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது. அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

○ அவலானது அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம்.

○ கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம் உள்ளது.
👉👉தற்போது அவை என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் 

■ அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
■ குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம்.
■ நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாகவும் சமைத்து உண்ணலாம்.
■ சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தருகின்றது.
■ அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப்படுகிறது.
■ வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போஹைட்ரேட், கலோரி உள்ளது. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் இது முதலிடம் வகிக்கின்றது. மேலும் இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது.
■ பொதுவாக அவலை தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடலாம். அவலோடு பாலும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
■ அவலும் மோரும் கூட சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் அதிக தாகம் உண்டாவது தீரும். ஆனால்... அவலும் தயிரும் சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் மந்தம் உருவாகும்.
■ அவலில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள சிவப்பணுக்களை அதிகப்படுத்தும்.

📍குறிப்பு:
●ஆயுள்வேத முறைப்படி வீட்டில் கை மருந்தில் உங்களின் பிரச்சினைகளை சரி செய்ய சிறிது காலம் தேவைப்படும். ஒரேநாளில் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும்.

● எந்த ஒரு முறையை பின்பற்றும் போதும் தொடர்ச்சியாக செய்து வரும்போது தகுந்த பலனை எதிர்பார்க்க முடியும்.


            "வாழ்க வளமுடன்"

Comments

Popular posts from this blog

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢