This is the Beauty secret of Kerala ladies! - கேரள பெண்களின் அழகின் இரகசியத்திற்கு இதுதான் காரணம். வாங்க நாங்களும் இப்படி try பண்ணி Best result எடுப்போம்.
இன்றைய அவசர உலகில் எல்லோரும் குறுகிய காலத்தில் பெரும் தங்க மலையை கூட ஒரே நொடியில் உடைத்து விற்று பணக்காரர் ஆகிவிட வேண்டுமென்ற நோக்கில் சுற்றிக் கொண்டுள்ளனர். அதே போன்று தான் சிலர் 2 நாட்களில் பளபளப்பான முகம் வேண்டுமென்றும் வெள்ளையாக வேண்டுமென்பதற்காகவும் அதிக விலையுள்ள கிரீம் வகைகளை வாங்கி பாவிக்கின்றனர். காலப்போக்கில் என்ன நடக்கும் என்று யோசித்துக் கூட பார்க்க முடியாதளவு நேரமின்மை நம் இளம் சமுதாயத்தை ஆட்டிப்படைத்துள்ளது.
இரசாயண பதார்த்தத்தை முகத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் போது ஆரம்பத்தில் உள்ளதை விட இன்னும் அதிக அளவு சர்மத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மட்டுமே உண்மை.
இதற்கு தீர்வாக இயற்கை முறையில் அழகை மெருகூட்டலாம். இயற்கை முறையை தெரிவு செய்வதானால் பக்கவிளைவு 100% இல்லாமல் இருக்கும்.
கேரள பெண்களின் அழகின் இரகசியத்திற்கு காரணமான ஒரு பொருளை வைத்து உங்களின் இயற்கை அழகை வெளிக்கொணர வேண்டுமென்ற நோக்கில் இப்பதிவை பதிவேற்றம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
பங்காற்றுகிறது.
உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை இது வழங்குகின்றது.
அதுமட்டுமின்றி சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
தினமும் முகம், கை,கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு
ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
• உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா?
அதைத் தடுக்க ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2
தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
• சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த
எண்ணெய் பசையை நீக்க,1தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியில், எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.
• 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி
வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
• வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு
பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
📍குறிப்பு:
●ஆயுள்வேத முறைப்படி வீட்டில் கை மருந்தில் உங்களின் பிரச்சினைகளை சரி செய்ய சிறிது காலம் தேவைப்படும். ஒரேநாளில் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும்.
● எந்த ஒரு முறையை பின்பற்றும் போதும் தொடர்ச்சியாக செய்து வரும்போது தகுந்த பலனை எதிர்பார்க்க முடியும்.
"வாழ்க வளமுடன்"







Comments
Post a Comment