Skip to main content

பப்பாளி (Papaya) பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவா...?

பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.  எப்படியெனில் பப்பாளியில் இருக்கும் வேதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது. 

பப்பாளிப்பழம் இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.  நமது உடலில் காயம் ஏற்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான நொதியங்கள் (enzymes) பப்பாளியில் உள்ளது. 

கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப்பழமே சிறந்த உணவாகும். 


வயிற்றுப்போக்கு, வாய்வு, நெஞ்செரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும். பப்பாளியில் உடலில் ஏற்படும்  அழற்சியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன.  ஆதலால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர். 



1.பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். 






2.பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர
புண்கள் குணமடையும். 





3.பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும். 




4.பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள்
வெளியேறும். 






5.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி, விஷம் இறங்கும். 




6. அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 


7.அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்குதல் குறைவு.

Comments

Post a Comment

Popular posts from this blog

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢