● இன்றைய அவசர உலகில் எல்லோருக்கும் பொதுவாக உள்ள மிகப்பெரிய பிரச்சினை தலைமுடி உதிர்தலாகும். இதனால் 90% மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தலையில் வழுக்கை, முன்நெற்றி ஏற்றம் போன்ற பிரச்சினைகளை மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
● இதை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கலாம் என்று பொய்யாக கூறுவதை விட தகுந்த பராமரிப்பு மூலம் தலைமுடி உதிர்வை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்று உறுதியாக கூறலாம்.
● வெங்காய ஹேர்பேக் தலைமுடி உதிர்வுப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
● ஏனென்றால் இதில் இயற்கையாக கந்தகம் (sulphur) காணப்படுகிறது. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவும்.கொலாஜன் ஆரோக்கியமான தோல் செல்கள் உற்பத்தி மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி மற்றும் உச்சந்தலையில் சேர்க்கும்போது, முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
● இப்போது வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் பார்ப்போம்.
●தேவையானவை:
1.வெங்காயம்(Onion) - 2,
2.மயோனைஸ் (Mayonnaise)- 3 ஸ்பூன்,
3.தயிர்(Curd) - 25 மில்லி.
அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
●இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப்
பிரச்சினை தீர்வுக்கு வரும்.
●சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும்.
●வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்க வேண்டாம்.
●5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும் படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும்.
●உலர்ந்தவுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும். இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன் படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும்.
📍குறிப்பு:
●ஆயுள்வேத முறைப்படி வீட்டில் கை மருந்தில் உங்களின் பிரச்சினைகளை சரி செய்ய சிறிது காலம் தேவைப்படும். ஒரேநாளில் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகும்.
● எந்த ஒரு முறையை பின்பற்றும் போதும் தொடர்ச்சியாக செய்து வரும்போது தகுந்த பலனை எதிர்பார்க்க முடியும்.
"வாழ்க வளமுடன்"





Comments
Post a Comment